மணிப்பூர் விவகாரத்தில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் இடம்பெற்ற வன்முறை தொடர்பான 6 வழக்குகளில், இதுவரையில் எவரையும் கைது செய்யவில்லை என மத்திய புலனாய்வு பணியக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் வன்முறை தொடர்பான ஆறு வழக்குகள் குறித்து மத்திய புலனாய்வு பணியகம் விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்ததை அடுத்து, அந்த வழக்குகளை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை அடுத்து, 6 வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய புலனாய்வு பணியக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

இன அடிப்படையில் கடுமையான தவறுகள் நிகழும் ஒரு மாநிலத்தில் சாட்சிகளைக் கண்டறிவது கடினமானதாகும் என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.