மதுபானம் மீதான வரி உயர்த்த திட்டம்.

எதிர்வரும் ஜூன் மாதத்தில் மதுபானம் மற்றும் புகையிலை மீதான வரிகளை மீண்டும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2025ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாக வரி வருமானத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இலங்கையில் புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அதன் அடிப்படையில் நாடு முழுவதும் சொத்து வரியை அறிமுகப்படுத்தவும், நிதி பரிமாற்றங்களை மதிப்பாய்வு செய்யவும், ஜனவரி 1, 2025 முதல் வரி இல்லாத கொடுப்பனவு மற்றும் குறைந்தபட்ச விலக்குகளுடன் பரிசு மற்றும் பரம்பரை வரியை நடைமுறைப்படுத்த  திட்டமிட்டுள்ளது.

இலங்கையின் பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அமைச்சர்கள் இந்த வரி உயர்வுகளால் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.