மதுவை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

மது அருந்துபவர்கள் சராசரியாக ஒரு நபர் ஆண்டுக்கு 9.5 லிட்டர் ஆல்கஹால் உட்கொள்வதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சிலர் அவ்வப்போது குடிப்பவர்கள். 28 நாட்களுக்கு மது அருந்தாமல் இருப்பது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நமது பழக்கவழக்கங்களால் நமது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. நமது பழக்க வழக்கங்களால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. சில மாற்றங்கள் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கின்றன. சில மாற்றங்கள் மிகவும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

மது குடிக்கும் பழக்கத்தை கைவிடுவது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பலவிதமான நன்மைகளை தரும்.

பொதுவாக, மது குடித்து உறங்கும் நிலையில் மூளையின் இயக்கம் சரியான நிலையில் இல்லாமல் போவதால் ஆழ்ந்த தூக்கம் இருக்காது.

மதுவை கைவிடும் போது மூளையின் இயக்கம் சீராக இருப்பதால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

காலையில் எழும் போது ஹேங்க் ஓவர் தலைவலி பாதிப்புகள் நீங்கும். மது உடலில் இருக்கும் நீர் சத்தை உறிஞ்சிக் கொள்வதால் வாய் நாக்கு வறண்டு விடும். ஆனால், மது குடிக்காதபோது உடலில் நீர் விநியோகம் சரியாக இருக்கும். மது மூளையில் உள்ள மெல்லிய நரம்புகளை பலவீனம் அடையச் செய்துவிடும்.

மூளையின் நினைவாற்றலை கையாளும் பகுதியான “ஹிப்போகேம்பஸ்” என்ற பகுதியை செயல்பட விடாமல் மது தடுக்கிறது. இதனால், நினைவாற்றல் குறையும். எளிதில் எந்த விஷயங்களும் உடனே நினைவுக்கு வராது. ஆனால், மதுவை நிறுத்தியவுடன் மூளை நரம்புகள் பலம் பெறுவதால் நினைவாற்றல் மேம்பட ஆரம்பிக்கும்.

மது உடலின் வளர்சிதை மாற்றத்தை குறைப்பதால் உண்ணும் உணவின் சத்துக்கள் உடலில் உட்கிரகிக்கப்படாமல் போகிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும்.

மதுவை நிறுத்தி விடும்போது வயிறு நன்றாக இருக்கும். செரிமான மண்டலம் பலம் பெற்று குடல் உறிஞ்சிகள் ஊட்டச்சத்துக்களை நன்றாக உறிஞ்சி, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை ரத்தத்தில் சேமிப்பதால் உடல் பலம் பெறும்.

மதுப்பழக்கம் உடலின் தோல் பகுதியில் உள்ள நீர்ச்சத்தை இழக்க செய்வதால் மங்கலான அல்லது வீங்கிய சருமம் மற்றும் தோல் அழற்சியை ஏற்படுத்தும். மதுவை கைவிடும் போது தோலுக்கு போதியளவு நீர்ச்சத்து கிடைத்து சரும ஆரோக்கியம் மேம்படும்.

மதுப்பழக்கம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான முக்கிய காரணமாக அறியப்படுகிறது. மதுவை கைவிடும்போது இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.