மனித உரிமை செயற்பாட்டாளர்களை சுதந்திரமாக செயற்பட விடுங்கள் எனும் கோரிக்கையை முன்வைத்து வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில், நீதிக்கான மக்கள் அமைப்பினால் குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று வவுனியா குருமன்காட்டு சந்தியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் போது, “மனித உரிமை செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவதை நிறுத்து”, “கருத்துச்சுதந்திரம் எங்கள் உரிமை”, “நடமாடும் சுதந்திரம் எங்கள் உரிமை”, போன்ற வாசகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அமைதியாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குறித்த போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.