மனைவியை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கணவர் உள்பட 4 பேர் கைது.

இராஜஸ்தானின் பன்ஸ்வாரா பகுதியில், மனைவியை மரத்தில் கட்டி வைத்து தடியால் தாக்கிய கணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தனது நண்பருடன் மனைவியை கண்ட கணவர்,  மனைவியை மரத்தில் கட்டி வைத்து இரக்கமில்லாமல் தாக்கிய நிலையில், அவரது நண்பரையும் மரத்தில் கட்டி வைத்து உறவினர்கள் விசாரணை நடத்தினர்.

சுமார் 7 மணி நேரம் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பெண் வலியால் அலறித் துடித்த காட்சிகள் இணையத்தில் பரவியதை தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தேசிய மகளிர் ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்த காவல்துறை தலைமை இயக்குனருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.