மன்னாரில் விபத்து : ஒருவர் பலி 

மன்னார்- தலைமன்னார் பகுதியில் உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

தலைமன்னாரில் இருந்து ஊர்மனை நோக்கி பயணித்த உந்துருளியும் ஊர்மனையிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

தலைமன்னார் ஊர்மனையை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.