மன்னாரில் விபத்து – பெண் பலி, பலர் காயம்!

மன்னார் – மதவாச்சி வீதியின் முருங்கன் பகுதியில் வேன் ஒன்று விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
 
கல்முனையில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
 
வேகக்கட்டுப்பாட்டை இழந்த வேன், வீதி அருகிலுள்ள மின்கம்பம் ஒன்றில் மோதி விபத்திற்குள்ளானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
 
விபத்தில் காயமடைந்தவர்கள் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.