மரியுபோலில் போர் தொடங்கியதில் இருந்து 1348  அப்பாவி மக்கள் பலி.

உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் ஆயிரத்து 348 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய ஐ.நா மனித உரிமைத் தலைவர்,

போர் தொடங்கியதில் இருந்து மரியுபோலில் அதிக எண்ணிக்கையிலான உயிர் சேதங்கள் பதிவானதாகவும், அங்குள்ள 10 குடியிருப்பு கட்டிடங்களில் 9 அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, உக்ரைனின் 2-ஆவது பெரிய நகரமான கார்கிவில் உணவுத் தொழிற்சாலை மீது ரஷ்ய படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில், தொழிற்சாலை இடிந்து நொறுங்கி தரைமட்டமாகியுள்ளது.