மருந்துக்காக மட்டுமே கஞ்சா பயிரிட அனுமதி. ; சிசிர ஜயகொடி

புகைப்பதற்கு கஞ்சாவை பயன்படுத்த ஆயுர்வேதத்தில் எவ்வித அனுமதியும் இல்லை எனவும், இது சம்பந்தமாக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் பரஸ்பர கருத்துக்கள் இருப்பதாகவும் சுதேச வைத்தியத்துறை ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

மருந்துக்காக மாத்திரம் கஞ்சா பயிரிடுவதை சட்டமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொழுது போக்கு அல்லது வேறு தயாரிப்புகளுக்கு கஞ்சாவை பயன்படுத்த அனுமதி இல்லை.

மருந்துக்காக கஞ்சாவை பயிரிட சட்ட ரீதியாக அனுமதியை பெற்றுக் கொள்ள அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பத்திரத்திற்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அனுமதி கிடைக்கும்.

அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னர், மருந்துக்காக கஞ்சாவை பயிரிடுவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒரு வரையறை உருவாக்கப்படும்.

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை கையெழுத்திட்டுள்ள இணக்கப்பாடுகளுக்கு அமைய மருந்து மற்றும் விஞ்ஞான நோக்கங்களுக்காக கஞ்சாவை பயன்படுத்த முடியும்.

கஞ்சா சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மருந்துக்கான கஞ்சா பயிரிடுவதை சட்டமா  அந்த குழு இணக்கம் வெளியிட்டுள்ளது எனவும் ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி கூறியுள்ளார்.