மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு

சீதுவ, லியனகேமுல்ல பிரதேசத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

லியனகேமுல்ல கெலேபல்லிக்கு அருகில் உள்ள வீதியில் உள்ள வடிகாலில் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த பெண்ணை வேறு இடத்தில் கொலை செய்து சடலம் போடப்பட்டதா அல்லது அதே இடத்தில் கொலை செய்யப்பட்டாரா என இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.