மலேசியாவில்  காமராஜர் சிலை திறப்பு

மலேசியாவில்   புந்தோங் இந்தியன் ரிக்ரேஷன் கிளப்( ஐ.ஆர்.சி) வளாகத்தில் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

1954 ஆண்டு மலேசியா புந்தோங்கிற்கு வருகை அளித்த காமராஜர் இங்கு நிர்மாணிக்கப்பட்ட ஐ. ஆர் . சி. கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த சிலையை வர்த்தக பிரமுகர் ஒம்ஸ் தியாகராஜன் திறந்து வைத்தார்.

காமராஜர் தமிழ்நாட்டிற்கு வழங்கிய ஆற்றி வந்த சேவையை நினைவுக் அவர் நினைவுக் கூர்ந்தார். இந்த நிகழ்வில் முனைவர் காதர் இப்ராஹிம் உட்பட பல பிரமுகர்கள் கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.