மழலையர் பாடசாலை மீது ரஷ்ய ராக்கெட் தாக்குதல்.

உக்ரைனின் ஸ்லோவியன்ஸ்க் நகரில் 100 குழந்தைகள் இருந்த மழலையர் பாடசாலை மீது ரஷ்ய படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில்  பாடசாலை கட்டடம் இடிந்து சேதமடைந்துள்ளது.

முன்னதாக டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய படையினர் நிகழ்த்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் காயமடைந்தனர்.

போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய படைகள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பாடசாலைகள் மீது தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.

286  பாடசாலைகள்  முற்றிலும் சேதமடைந்துள்ளது.