மாணவர்களை இலக்கு வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட  இரு பெண்கள் கைது.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நுகேகொடை பிரதேசத்தில் இயங்கி வந்த பாலியல் விடுதி ஒன்று குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் குறித்த பாலியல் விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளதோடு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படும் இரு பெண்கள், கைது செய்யப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை மற்றும் மத்துகம பகுதிகளை சேர்ந்த 45 மற்றும் 43 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையத்தளத்தில் வர்த்தக விளம்பரங்களை காட்சிப்படுத்தி, சூம் தொழில்நுட்பம் வாயிலாக கல்வி பொது தராதர சாதாரண தர மற்றும் உயர்தர கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக சூட்சுமமான முறையில் இவ்வாறு பாலியல் தொழில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த விளம்பரங்களை பார்வையிட்டு பல மாணவர்கள் பாலியல் விடுதிக்கு வருகை தந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு, விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.