மாணவர்கள் மீது மரம் விழுந்ததில் மாணவி ஒருவர் பலி. : 13 பேர் காயம்.

சண்டிகரில், வேரோடு மரம் முறிந்து  பாடசாலை மாணவர்கள் மீது விழுந்த விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில், 13 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மார்க் பகுதியில் அமைந்துள்ள செக்டர் 9-ல், மதிய இடைவேளையின் போது  பாடசாலை வளாகத்தில் இருந்த மரம் வேரோடு முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.