மாணவியிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியரை நொறுக்கிய மாணவிகள்.

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் தனியார் கல்லூரி விடுதி மாணவியிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியரை, மாணவிகள் அடித்து உதைத்து, விடுதியிலேயே கட்டி வைத்த சம்பவம் நடந்துள்ளது.

ஸ்ரீரங்கபட்டனா அருகே கட்டேரி கிராமத்தில், தனியார் கல்லூரி வளாகத்தில் விடுதிக்கு அருகில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்து, தலைமையாசிரியர் சின்மயானந்த மூர்த்தி, வேலை பார்த்து வந்துள்ளார்.

இரவில் விடுதியை மேற்பார்வையிடுவதை வழக்கமாக வைத்திருந்த தலைமை ஆசிரியர், நேற்று இரவு மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த மாணவியிடம் தலைமை ஆசிரியர் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி, மற்ற மாணவிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மாணவிகள் ஒன்றுகூடி தலைமையாசிரியரை அடித்து, உதைத்து விடுதியிலேயே கட்டி வைத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.