மானிப்பாயில் வாள்வெட்டு. ; இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத மூவர், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் நகரத்தில் அமைந்துள்ள வணிக வியாபார நிலையத்தில் பணிபுரியும் தெல்லிப்பழையில் வசிக்கும் 21 வயதுடைய ஜெயக்குமார் சஜீந்திரன் என்ற இளைஞனின் இடது கையை நேற்றைய தினம் வெட்டிச் சென்றனர்.

கையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் தற்போது காயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.