மாலைதீவில் இலங்கையர்கள் வசிக்கும் கட்டிடத்தில் தீ விபத்தில் 10 பேர் பலி.

மாலைதீவு தலைநகர் மாலேயில்,  கட்டிடமொன்றில் இன்று (10) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த பணியாளர்கள் வசிக்கும்  கட்டிடமொன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில், 9 இந்தியர்களும் ஒரு பங்களாதேஷ் பிரஜையும் உயிரிழந்ததாக மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் உறுதி செய்துள்ளார்.

உடல்கள் கடுமையாக எரிந்துள்ளதால், அவற்றை அடையாளம் காண்பது கடினமாக இருப்பதாக அதிகாரிகள் கூறியதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.