மின்னல் தாக்கி 20 பேர் பலி.

இந்தியாவின்   பீகார்   மாநிலத்தின் 8 மாவட்டங்களில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மின்னல் தாக்கி 20 பேர் பலியாகினர்.

இந்நிலையில் குறித்த மாநிலத்தில் இன்று கடுமையான இடி, மின்னலுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் ஆண்டுதோறும் மின்னல் தாக்கி நூற்றுக் கணக்கானோர் மரணிக்கின்றனர்.

இந்தநிலையில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் இந்தியா ரூபா இழப்பீடாக வழங்கப்படும் பீகார் மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாடசாலை மற்றும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட அரச கட்டடங்களில் மின்னல் தடுப்பு கருவிகளை நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பீகார் மாநில முதலமைச்சர், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.