மின் கட்டண அதிகரிப்பை கண்டித்து கொழும்பில்   ஆர்ப்பாட்டம்  

கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மின் கட்டண அதிகரிப்பை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இலங்கை மக்கள் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.