மியான்மரில் இரண்டு தமிழர்கள் சுட்டுக் கொலை.

இந்தியா மணிப்பூரில் இருந்து மியான்மரில் குடியேறிய இரண்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

முச்சக்கர வண்டி சாரதி  மோகன் மற்றும் வணிகரான அய்யனார் ஆகிய இருவரும் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டிருந்தது.

மோட்டார் சைக்கிள்களில் வந்த மியான்மர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த இருவரையும் நெற்றியில் சுட்டுக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எதற்காக இந்தக் கொலைகள் நடைபெற்றன என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே பொது மக்கள் கொலையாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.