மீண்டும் இலங்கையில் கோவிட் 19 தொற்று பரவல்.  .

இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் கோவிட் 19 தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவர்கள் கேகாலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கேகாலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தை எமது செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவிய போது, அலுவலக அதிகாரி ஒருவர் இந்த விடயத்தை நிராகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் கொவிட் தொற்றுக்குள்ளான மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் கோவிட் தொற்றுக்குள்ளான 5 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் உலகின் சில நாடுகளில் மீண்டும் கோவிட் தொற்று பரவல் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கையில் இது தொடர்பில் கடுமையான அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.