எரிபொருள் விநியோக நடவடிக்கையை ஒழுங்குபடுத்தும் முகமாக முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யுமாறு வவுனியா பொலிசார் அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடாளாவிய ரீதியில் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருளினை குறிப்பிட்ட சில எரிபொருள் நிலையங்கள் ஊடாக வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனடிப்படையில், குறித்த எரிபொருள் விநியோக செயன்முறையை ஒழுங்குபடுத்தும் வகையில் வவுனியா பொலிசாரால் அனைத்து முச்சக்கர வண்டிகளையும் தம்மிடம் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிபெருக்கி மூலம் குறித்த அறிவித்தலை வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் பொலிசார் அறிவித்து வருகின்றனர்.