முதல் இடத்திற்கு முன்னேறினார் வனிந்து ஹசரங்க!

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான சகலதுறை வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது.

இதன்படி குறித்த தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 228 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அத்துடன் பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹசன் 223 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார் .

முன்னதாக வனிந்து ஹசரங்க மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகிய இருவரும் சமமான புள்ளிகளோடு முதலிடத்தில் இருந்த நிலையில் அவரை பின் தள்ளி வனிந்து ஹசரங்க முதலிடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.