முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில்  – STF விஷேட சோதனை நடவடிக்கை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் இணைந்து விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின் ஒரு பகுதியாகவே புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை நேற்று புதன்கிழமை (13) மாலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த  நடவடிக்கையில் பொலிஸார், விஷேட அதிரடி படையினர் ஆகியோர் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன்  எதுவிதமான சந்தேகத்திற்கிடமான பொருட்களும் மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.