மூன்று வேளை உணவு வழங்க வேண்டும் என்றால், மதுபான விலையை குறைக்குமாறு கோரிக்கை.

இந்த நாட்டில் போசாக்கின்மை தொடர்பில் கவனம் செலுத்தி, மூன்று வேளை உணவு வழங்க வேண்டும் என்றால் மதுபானசாலைகளை மூட வேண்டும். அல்லது மதுபானத்தின் விலையை குறைக்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

பகல் முழுவதும் உழைக்கும் மக்கள் மாலையில் சிறிதளவு மதுபானம் அருந்துவது வழக்கமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மதுவின் விலை உயர்வால் மது அருந்திவிட்டு வீடுகளுக்கு கொண்டு செல்ல பணம் இல்லை எனவும், இதனால் குடும்பத்திற்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.