மூவர் மீது துப்பாக்கிச் சூடு. : காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு

கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 55 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் காவல்துறை அதிகாரிகளும் மூன்று பெண்களும் அடங்குவர்.

மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதி மாளிகையிலும் ஜனாதிபதி செயலகத்திலும் போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.