இரண்டு கனேடியர்கள் மெக்சிகோவின் கரீபியன் கடற்கரை ரிசார்ட் பிளாயா டெல் கார்மெனில் கத்திக்குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் இன்டர்போலால் தேடப்பட்டவர் என கூறப்படுகின்றது. ஆண் ஒருவரும் பெண் ஒருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடுகையில், யாருடைய அடையாளம் பகிரங்கப்படுத்தப்படவில்லை, ஒருவர் இன்டர்போலால் தேடப்பட்டார்.
அவர் ஒரு சுற்றுலாப் பயணி அல்ல, என்று அந்த அதிகாரி கூறினார், அந்த நபர் மெக்சிகோவில் சுமார் நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.
உள்ளூர் பொலிஸ் அறிக்கையை மேற்கோள் காட்டி பாதிக்கப்பட்டவர்களின் தொண்டை வெட்டப்பட்டதாக மெக்சிகன் ஊடகங்கள் தெரிவித்தன.
குயின்டானா ரூ அட்டர்னி ஜெனரல் அலுவலகம் இருவருக்கும் கத்தியால் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்தின் போது மூன்றாவது நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இறந்தவர்கள் கனேடிய குடிமக்கள் என்பதை மெக்சிகோவில் உள்ள கனடா தூதரகம் உறுதிப்படுத்தியது.
அத்துடன் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது.
தற்போது மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.