மெக்சிகோ சிறைச்சாலை மீது கடத்தல் கும்பல் தாக்குதல். ;  14  பேர் பலி.

மெக்சிகோவின் ஜூவாரஸ் நகரிலுள்ள சிறைச்சாலை மீது போதைப்பொருள் கடத்தல் கும்பல் நிகழ்த்திய கண்மூடித்தனமான தாக்குதலில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த 10 பேர் வீரமரணம் அடைந்தனர்.

புத்தாண்டு தினமான நேற்று காலை 7 மணியளவில் இயந்திர துப்பாக்கிகள் உட்பட ஏராளமான ஆயுதங்களுடன் கருப்பு உடையில் சிறைச்சாலைக்கு வந்த 14 பேர் கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதில் பாதுகாப்பு படையினர் 10 பேரும், கைதிகள் 4 பேரும் உயிரிழந்தனர்.

இதனை சாதகமாக கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிய 24 கைதிகளைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.