மெக்ஸிக்கோவில் வன்முறை. ; கனேடியர்களுக்கு எச்சரிக்கை

மெக்ஸிக்கோவில் வாழ்ந்து வரும் கனேடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மெக்ஸிக்கோவில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில் கனேடியர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளை விமான நிலையத்திற்கு ஏற்றிச் செல்லவிருந்த பஸ்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

மெக்‌ஸிக்கோவின் பிரபல போதைப் பொருள் கடத்தல்காரர் ஒவிடியோ என்பவரை கைது செய்த காரணத்தினால் அந்தப் பகுதிகளில் வன்முறைகள் வெடித்துள்ளன.

பிரபல போதைப் பொருள் கடத்தல்காரர் ஒவிடியோ

விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேவையற்ற நடமாட்டத்தை தவிர்க்குமாறு கனேடியர்களிடம் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.