மொனராகலையில் கோர விபத்து. : கணவனும், கர்ப்பிணி மனைவியும் பலி.

மொனராகலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆண் ஒருவரும், அவரது கர்ப்பிணி மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

மொனராகலை – வெல்லவாய வீதியில் புத்தல குடா ஓயா பிரதேசத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.