மோட்டார் சைக்கிள் சாகசம். ;  துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவி பலி.

நேற்று (22) பிற்பகல் மோட்டார் சைக்கிளும், துவிச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் 10 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குளியாபிட்டிய கிரிமெடியாவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முன்னால் வந்த மோட்டார் சைக்கிள் சாகசங்களை செய்துக் கொண்டு வந்ததால் தான் துவிச்சக்கர வண்டியில் இருந்து பாய்ந்ததாக உயிரிழந்த மாணவியுடன் சென்ற பெண் தெரிவித்துள்ளார்.

இதன்போது, மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டியை மோதிச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.