மௌனத்தின் இரவில் – தே.நிலா

வர்ணங்கள் கலையாத
வானவில்லின் நடுவே
வளைந்து நெளிந்து
மேகம் இருண்டது…..

மழைக்கால மையிருட்டு
எப்போதும் நம்மை குளிர்விக்கும்
அந்த இருட்டிலும்
இரைச்சல் மட்டும்
கேட்டுக் கொண்டே
இருக்கும்……..

காதல் நிரம்பிய
காற்று
கவிகள் நிரம்பிய
வானம்
ஏக்கம் நிரம்பிய
தேகம்
இரவின் பனித்துளிகளை
பற்றிக் கொள்ளும்
தேநீரின் பிரியங்கள்…..

கிளைகளில் ஆங்காங்கே
காற்றிலாடும்
அந்த ஊஞ்சல்
எப்போதும்
எம் நினைவுகளையும்
சேர்த்தே
இழுத்துச் செல்வதாய்….

ஒரு கணமும் ஓயாமல்
ஒவ்வொரு அனுபவத்தை
பகிர்ந்து கொள்ளும்
சிறு குடிசைகள்
என தொடரும்
இரவுகள்…….

காற்றிலாடும் கிளைகள்
கவலை மறக்கும் தூக்கம்
மனிதன் ஓய்ந்த பின்னும்
ஓயாத மனங்கள்…
மௌனத்தின் இரவில்
ஈர இரவுகளாய்…..

தே.நிலா