யாழில் ஆசிரியரின் மோசமான செயல்.

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (08) ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவரொருவர்  யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவ தினத்தன்று குறித்த மாணவனின் முகத்தில் ஆசிரியர் கடுமையாகத் தாக்கியுள்ளார் எனவும் இதனால் முகத்தில் கடும் வலி ஏற்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில்  மாணவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது  மாணவனின் முகத்தில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டமை வைத்தியர்களால் கண்டறியப்பட்டு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு வைத்தியசாலை ஊடாக அறிவிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.