யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்த சிறுவன் பலி.

ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்து வந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனுக்கு காய்ச்சல் என யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , வைத்திய பரிசோதனையில் சிறுவனுக்கு கிருமி தொற்று ஏற்பட்டு இருந்தமை கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுவன் ஊசி மூலம் போதைப்பொருட்களை நுகர்வதாக தெரியவந்துள்ளது.

அவ்வாறு ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றிய போதே கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை ஊசி மூலம் நுகர்ந்ததால் , கிருமி தொற்று ஏற்பட்டு , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.