யாழில் ஒருவருக்கு  ஒரு கோடியே 97 லட்சம் பெறுமதியான அதிர்ஷ்டம்.

சங்கானைப் பிரதேச தேசிய லொத்தர் சபையின் AM அதிர்ஷ்ட இல்லத்தின் விற்பனை முகவரான த.சகீஜன் ஊடாக ஒரு கோடியே 97 லட்சம் பெறுமதியான அதிர்ஷ்ட லாப சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சீட்டிழுக்கப்பட்ட தேசிய லொத்தர் சபையின் மஹஜன சம்பத சீட்டிழுப்பின் ஊடாக ஆறு வெற்றி இலக்கங்களையும் ஆங்கில எழுத்தையும் சரியாக பொருத்தி அன்றைய தினத்திற்கான சூப்பர் பரிசான 19,710,564/= ரூபா வெல்லப்பட்டுள்ளது.

குறித்த முகவருடாக 2020 ஆம் ஆண்டு மூன்று கோடியே 71 லட்சத்திற்கும் அதிகமான பணப்பரிசை வெல்வதற்கான அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.