யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இளைஞரொருவர் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சிறுமி ஒருவர் குளிப்பதை இளைஞரொருவர் தனது தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளார்.
இதனை அவதானித்த சிறுமி உடனடியாக கூக்குரலிட்டு உள்ளார்.
இதனையடுத்து குறித்த இளைஞர் அயலவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சந்தேக நபர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.