யாழில் பதற்றம் ! போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

யாழ்ப்பாணத்தில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் இன்று (15) நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தேசிய தைப்பொங்கல் நிகழ்வு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டததில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டுள்ளனர்.  

ஆர்ப்பாட்டதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.