யாழில் பேருந்தில் நசியுண்டு கொல்லப்பட்ட இளைஞன்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பேருந்தில் பயணித்த 21 வயது இளைஞன் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த துயர சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த பேருந்தில் பயணம் செய்திருந்த இளைஞர் ஒருவர் பருத்தித்துறை முதலாம் கட்டை சந்தி நிறுத்தத்தில் இறங்கியதும் மயக்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

 அங்கு பரிசோதிக்கப்பட்ட போது இளைஞர் உயிரிழந்தமை தெரியவந்தது.

அதன் பின்னர் இளைஞனின் உடலம் பிரதே பரிசோதனை மேற்கொள்வதற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.