யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது.

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகள், மாத்தரிகளை விற்பனை செய்தன் ஊடாக பெற்றுக்கொண்ட பணம் என்பவற்றுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோண்டாவில் வீரபத்திரர் கோவிலை அண்டிய பகுதியில் இளைஞன் ஒருவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், போதை மாத்திரை விற்பனை செய்தார், எனும் குற்றச்சாட்டில் 23 வயதான இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை அவரது உடமையில் இருந்து ஒரு தொகை போதை மாத்திரை, அவற்றை விற்பனை செய்ததன் மூலம் பெற்றுக்கொண்ட பணம் என்பவற்றை மீட்டுள்ளனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.