யாழில் ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பலி.  

ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் திடீரென சுகவீனமடைந்து மூச்சு எடுக்க அவதிப்பட்ட போது, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவம் நேற்றைய தினம் மாலை இடம்பெற்றதுடன் காங்கேசன்துறை கொல்லன்கலட்டியைச் சேர்ந்த 10 வயதுடைய தர்மராசா தர்சிகன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.