யாழில் வாள்களுடன் ஒருவர் கைது!

வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய ஆவா குழு ரௌடியின் தொடர்பில் இயங்கிய ரௌடி ஒருவர் அச்சுவேலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட், குட்டையன்புலம், வசாவிளான் கிழக்கு பகுதியை சேர்ந்த தனுஸ்ராஜ் என்பவரே நேற்று (7) மாலை யாழ்ப்பாணம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், வெளிநாட்டிலுள்ள ஆவா குழு ரௌடி ஒருவருக்கு சொந்தமாக ஈவினைப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மோட்டார் சைக்கிள் டிஸ்ஸைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 5 வாள்களும், 3 கஜேந்திர வாள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த நபரின் கைத்தொலைபேசியை பரிசோதித்த போது, தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஆவா குற்றக் கும்பலைச் சேர்ந்த பிரசாத் ஜாய் என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.