யாழில், வைத்தியரின் காரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்த இருவர் கைது.

வைத்தியர் என அடையாளப்படுத்தும் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சென்ற இரு இளைஞர்கள் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரில் பயணித்த இரு இளைஞர்களில் ஒருவரிடம் 600 மில்லிகிராமும் மற்றைய இளைஞனிடம் 430 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் பயணித்த இளைஞன் ஒருவரின் சகோதரர் வைத்தியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.