யாழ்ப்பாணத்தில்   போதைப்பொருள் நுகர்ந்த   இரண்டு பெண்கள் கைது

யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடு ஒன்றுக்குள் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த 2 பெண்களை நேற்றிரவு (29) பொலிஸார் கைது செய்ததுடன், அவர்கள் வசமிருந்த 2 கிராம் போதைப் பொருளையும் கைப்பற்றினர்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருப்பதாக, யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த 2 பெண்களும் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் போதைத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சாயிமேனன் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.

28 மற்றும் 29 வயது மதிக்கத்தக்க 2 பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன், விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.