யாழ். குருநகரில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி பலி.

யாழ்ப்பாணம் குருநகரில் நேற்று முன் தினம் (15) இரவு கடற்றொழில் மேற்கொள்ள சென்றவர் மூழ்கி அமிழ்ந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குருநகரைச் சேர்ந்த 40 வயதுடைய அலோசியஸ் ஜான்சன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

மீன் பிடிப்பதற்காக கடலில் இறங்கிய குறித்த நபர் வலை வீசி மீன் பிடித்துள்ளார்.

சிறிது நேரத்தில் அவரைக் காணவில்லை என்று தேடிப் பார்த்தபோது நீரினுள் மூழ்கி சடலமாக காணப்பட்டுள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.