யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பேர் கைது – கிளிநொச்சியில் பதற்றம்

இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் பேரணியை தடுக்க பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தியமையால் வீதித்தடைகளை தாண்ட பல்கலைக்கழக மாணவர்கள் முற்பட்ட நிலையில் அமைதியின்மை ஏற்பட்டது.

பொலிஸாரால் போராட்டகாரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர் புகைப் பிரயோகம் நடத்தி  மாணவர்கள் ஐந்து பேரை பொலிஸார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

குறித்த மாணவர்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து போராட்டகாரர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.