யாழ்.வடமராட்சி – வல்லிபுர கோவில் தேர் திருவிழாவில் 15 பவுன் நகைகள் திருட்டு.

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தின் தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களிடம் சுமார் 15 பவுண் தங்க நகைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தேர் திருவிழா இடம்பெற்றிருந்த நிலையில் பல ஆயிரம் பக்தர்கள்  நாட்டின் பல்வேறு  பகுதிகளில் இருந்தும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பக்தர்களுடன் கலந்திருந்த திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

இதன்போது சுமார் 15  பவுன்  தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 7 பேர் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.