ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்திற்கிடையிலான யூரோ (Euro) கிண்ணக் கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி 4ஆவது முறையாக யூரோக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் 24 அணிகள் பங்கேற்கும் யூரோக் கிண்ணக் காற்பந்துத் தொடரானது கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமானது. இத் தொடரில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் பெர்லின் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தியது.
இதன்மூலம் 1964, 2008 மற்றும் 2012க்குப் பிறகு, நான்காவது முறையாக ஸ்பெயின் யூரோ காற்பந்து கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.