ரஷ்யா நடத்திய எறிகணை தாக்குதலில் 5 பேர் பலி

கிழக்கு உக்ரைன் நகரமான, பொக்ரோவ்ஸ் (Pokrovsk) பகுதியில், குடியிருப்பு தொகுதியினை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய எறிகணை தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் 3 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரி ஒருவரும், பொதுமக்களில் 4 பேரும் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

அதேநேரம், அங்கு தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் தங்கியுள்ள குடியிருப்புகள் மீது ரஷ்யா தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களை, உக்ரைன் ஜனாதிபதி வன்மையாக கண்டித்துள்ளார்.