உக்ரைனின் கிழக்குப்பகுதியில் ராக்கெட் வீசி நடத்திய தாக்குதலில் 600 உக்ரைன் இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அண்மையில் மகீவ்கா நகரில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் 89 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக, இந்த பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனில் உக்ரைன் வீரர்கள் தங்கியிருந்த தற்காலிக ராணுவ தளத்தின் மீது ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதனிடையே, ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று கிராமடோர்ஸ்க் மேயர் தெரிவித்துள்ளார்.