22வது அரசியலமைப்பு திருத்தம் காரணமாக ராஜபக்ச குடும்பத்திற்குள் கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க வேண்டுமாயின் இரட்டை பிரஜாவுரிமையை கோட்டாபய ராஜபக்சவை போன்று இரத்து வேண்டும் என பசில் ராஜபக்சவுக்கு எதிராக சமல் ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்து குடும்பத்திற்குள் கடும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக தற்போது அமெரிக்காவில் இருக்கும் பசில் ராஜபக்ச திடீரென இலங்கை வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய பசில் ராஷபக்ச சில மாதங்கள் அமெரிக்கா சென்ற நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கைக்கு வருதை தர திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், 22வது திருத்தம் காரணமாக ராஜபக்ச குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பசில் ராஜபக்ச இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மௌனமான கொள்கையை கடைப்பிடித்து வருவதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சமல் ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.